அளவெட்டி – மல்லாகம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம்

அளவெட்டியில் தற்பொழுது இயங்கிவரும் பொதுத் தாபனங்களில் அளவெட்டி - மல்லாகம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் முக்கியமானதொன்றாகும். இச் சங்கம் உருப்பெற்ற வரலாறு சுவாரஸ்யம் மிக்கதாகும். இரண்டாம் உலக மகாயுத்தம் நிகழ்ந்த போது அரசினர் வழங்கும் உணவுப் பொருள்கள் சீராக எல்லோருக்கும் கிடைப்பதில் தடங்கல் நிலை ஏற்பட்டது. அதனால் உணவு விநியோகத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ...

மேலும் வாசிக்க→

நெடியகாடு மோர்மடம்

வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலின் தென்மேற்கு மூலையில் அமைந்திருக்கும் மண்டபத்தை அனைவரும் மோர்மடம் என்றே அழைப்பார்கள். இந்த மோர்மடத்தில் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலில் நடைபெறும் உற்சவங்களின்போது விநாயகப் பெருமானுக்கு நிறைகுடம் வைத்து ஆராதனை செய்வது வழக்கமாகும். அத்தோடு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலிற்கு, வல்வையில் வருடாந்த உற்சவங்கள் நடைபெறுகின்ற அனைத்து கோவில்களின் உற்சவ மூர்த்திகளும் ...

மேலும் வாசிக்க→

கணபதி படிப்பகம் – வல்வை

இன்று வல்வை நெடியகாட்டுப் பிள்ளையார் கோவிலின் வடக்கு பக்கத்தில் அமைந்திருக்கின்றது கணபதி படிப்பகம். ஆரம்பத்தில் வல்வை வேம்படிச் சந்திக்கு அருகாமையில் சின்னக்கிளியப்பாவின் கார் கராச்சில் வேம்படி வாசிகசாலை என்ற பெயருடன் இயங்கி வந்தது. அந்த வாசிகசாலையை கொத்தியால் யூனியன் தொளிலாளர்கள் மிகவும் சிறப்பாக நிர்வகித்து வந்தனர். அறுபதின் நடுப்பகுதியில் தமிழ்நாட்டுக் கரையோர கிராமமான விழுந்த மாவடிக்கும் வல்வெட்டித்துறைக்கும் ...

மேலும் வாசிக்க→

வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம்

வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் 1953ம் வருடம் ஊறணியில் உள்ள ஊற்றுக்கு முன்புறமாக உள்ள தனியார் காணியில் உதயமாகி விளையாடிவந்தார்கள். அக்கால கட்டத்தில் தற்போது ஊறணிக் குடியேற்றத்திட்டம் அமைந்துள்ள காணியை மைதானமாக்குவதற்காக முயற்சிகள் மேற்கொண்டு காணியை திருத்திக் கொண்டிருந்தபோது சில விசமிகளின் செயலால் அம்முயற்சி கைகூடாமல் போய்விட்டது. இருந்தாலும் அன்றைய நிர்வாகமும் விளையாட்டு வீரர்களும் சோர்ந்துவிடவில்லை ...

மேலும் வாசிக்க→

அரசடிப் பிள்ளையார் ஆலயம், நாயன்மார்கட்டு

இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஈழநாட்டில் தமிழர் தலைநகராக விளங்கிய யாழ்ப்பாணம் நல்லூரை இராசதானியாகக் கொண்டு அரசாட்சி புரிந்த தமிழ் மன்னாகிய சிங்கை ஆரியச்சக்கரவர்த்தியினால் அமைக்கப்பட்டது. மன்னன் இவ்வாலயத்திற்கு முன்னால் ஓர் அழகிய திருக்குளத்தை அமைப்பித்து அதன் நடுவில் ஓர் நீராழி மண்டபமும் விநாயகப் பெருமான் திருக்குளத்தில் நீராடி நீராழி மண்டபத்திலே இளைப்பாறிச் செல்வதற்கு வேண்டிய ...

மேலும் வாசிக்க→

எழுத்தாளர் துவாரகன் – பாகம் 2

தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ‘அம்ருதா’ ஏப்ரல் 2012 இதழில் வெளிவந்த நேர்காணல் நேர்காணல் - தீபச்செல்வன் ஈழத்தின் போர்க்காலக் கவிஞர்களில் ஒருவரான துவாரகன் வடக்கில் யாழ்ப்பாணம் தொண்டைமானாற்றைச் சேர்ந்தவர். ஈழத்தில் ஏற்பட்ட போர் வன்முறை ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்கள் போன்றவற்றின் தாக்கங்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவரது கவிதைகள் இயல்பு பற்றிய கனவை அவாவிக் கொண்டிருப்பவை. நளினமும் நகைச்சுவையும் மிஞ்சிய மொழியும் புதிய வகையிலான ...

மேலும் வாசிக்க→

சங்கடஹர சதுர்த்தி விரதம்

விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, ...

மேலும் வாசிக்க→

நாகமணிபுலவர்

இவர் நயினாதீவிலே சாலிவாகள சகாப்த்தம் கஅகரு-க்கும் கிறீஸ்தாப்தம் கஅகூக-க்குஞ் சரியான விக்கிரம வருடம் மார்கழி மாதம் க0 திகதியில் பிறந்தார்.வீரகத்தி பிள்ளையால் நடாத்தப்பட்ட திண்ணைப்பாடசாலையில் ஆரம்ப கல்வியினை தொடர்தார். அதன் பின்னர் தில்லையம்பல வித்தியாலயம் எனும் சைவபாடசாலையில் சோமசுந்தர ஐயரிடம் சில இலக்கண நூல்களையும் கற்றார். இதன்பின்னர் யாழ்ப்பாண வணிகர்களிற்கு கணக்கெழுதும் தொழிலில் அமர்ந்தார். பின்னர் ...

மேலும் வாசிக்க→

நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார்

இக்கோவிலானது 19 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கப்பட்டது. தற்போது கோவிலின் தெற்கு வீதியில் அமைந்துள்ள மடத்தில் வைரவர் என்னும் ஒரு ஆசார சீலரால் பிள்ளையாரை எழுந்தருளச் செய்து வணங்கி வந்தனர். சிலகாலங்களில் வேதாரணியத்தில் இருந்து கணபதி ஐயர் என்ற பெயருடைய ஒரு சைவக்குருக்களை அழைத்து வந்து பூசைகள் செய்து வந்தனர்.அவருடைய காலத்திற்குப் பின்பு அவருடைய மகன் சிவஸ்ரீ ...

மேலும் வாசிக்க→

பறைகள், கொத்துக்கள்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட நெல், குரக்கன், தினை, வரகு, போன்ற தானிய வகைகள் முன்பொரு காலத்தில் பறைக்கணக்காகவே விற்பனை செய்யப்பட்டது. சந்தைகளிலும் கூட சில்லறையாக அரிசி, தினை, குரக்கன் முதலியவற்றைக் கொத்துக்கணக்கில் விற்பனை செய்த காலமும் ஒன்றிருந்தது. ஒரு பறை அரிசி, அல்லது நெல், குரக்கன், தினை என்பவை இருபத்து நான்கு கொத்து அளவுடையனவாகும். ...

மேலும் வாசிக்க→