சந்நிதியான் அற்புதங்கள் நூல் பாகம் இரண்டு

இந்நூலானது கனடா செல்வச் சந்நிதி ஆலயத்தில் 28-08-2010 ம் ஆண்டு ந.அரியரத்தினம் அவர்களால் வெளியிடப்பட்டது. இவர் ஆசிரியராகவும், அதிபராகவும் பின்னர் கல்வி அதிகாரியாகவும் கடமையாற்றியவர். ஆன்மீகத்தில் கூடிய ஈடுபாடுடையவர். அதிலும் செல்வச் சந்நிதி முருகனிடம் கூடிய ஈடுபாடு உடையவர். இவர் தனது அனுபவத்தினையும் ஏனைய முருகன் அடியார்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தினையும் தொகுத்து இந்நுலை வெளியிட்டுள்ளார். இப்புத்தகத்தில் 11 வகையான அற்புதங்களை தொகுத்துள்ளார். வாழ்வியல் அனுபங்களை இறை சக்தியுடன் இணைத்து பார்க்கும் போதுதான் ஆன்மீக உணர்வுகள் எம் சிந்தனைக்குள் வளர்ச்சி அடைவதனை அனுபவிக்க முடியும். இப்படயான ஒரு அனுபவ தொகுப்பாக இது அமைந்துள்ளது.

தொடர்புகளுக்கு ஆசிரியரத்தினம் – 416-425-4877

புவனேந்திர ஐயா – 416-297-8716

– 416-731-8453