திரு(வெண்)பாவை – கவிதைகள்

குப்பிளான் நந்தா அவர்கள் தனது பழைய கால நிகழ்வுகளை ஒரு கவிதையாக வடித்துள்ளார். அவர் எவ்வளவு தனது கற்பனை திறத்தால் சிறந்த வரிகளில் வர்ணித்துள்ளார் என்பதை நீங்களும் வாசித்துதான் பாருங்களேன்.

திரு(வெண்)பாவை

திருவெண் பாவை பெண்ணிவளோ
தெருவினில் போகும் பூங்காற்றோ
மார்கழி மாதத்து பெண்ணிவளோ
மழையில் நனைந்த மான் குட்டியோ

கூந்தலின் வாசம் சன் சில்கில்
எந்தன் மனமோ அவள் பக்கத்தில்
கூந்தலில் கொட்டும் நீர் துளிகள்
என்னை விழிக்க செய்கிறதே
கைகளில் கிணும் வளையல்கள்
காதினில் ஏதோ சொல்கிறதே

ஆடைக்குள் சிக்கிய கொடியிடையோ
ஆண்டவன் கொடுத்த கொடையடியோ
கோயிலடியில் பார்த்தவளோ
குருக்கள் வீட்டுப் பெண்ணிவளோ
புத்தகம் நடுவில் மயிலிரகாய்
பொத்தியே வைச்சேன் இதயத்தில்.

இங்கனம் 
குப்பிழான் நந்தா

தாய்மை

கருப்பை எனும்
சுவரினுள் உயிர்
ஓவியங்களை தீட்டும்
தூரிகை இல்லா காரிகை

பேனா

தலைக்கனம் இல்லா நூல்களின் நாயகன்
தன்னிகரற்ற – பலர்
சிகரம் தொட தன் மைக் குருதியை தினம் சிந்தும் போராளி.

நன்றி – குப்பிளான் நந்தா

http://www.kuppilanweb.com இணையம்