“12 மணி நேரம்” ஆவணநூல்

12 மணி நேரம்

எழுத்தாளர் நீலவண்ணன் அவர்களால் 12 மணி நேரம் என்ற நூல் 1978 ம் ஆண்டு வரதர் வெளியீடாக வெளியிடப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட சூறாவளியை மையமாக கொண்டு எழுதப்பட்டது. இவரும் ஈழத்து எழுத்தாளர்களில் ஒருவர்.

” 1978 ம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ம் திகதி

இலங்கை வளி மண்டலவியல் அவதான நிலையம் தனது எச்சரிக்கையை வெளியிட்டது. வானொலியும் தினசரிப்பத்திரிகைகளும் இந்த எச்சரிக்கையை இலங்கை எங்கும் எடுத்துச் சென்றன.
வழமைபோல் மக்கள் இந்த எச்சரிக்கை செய்தியை அலட்சியமாக எடுத்துக் கொண்டனர். மீண்டும் 22 ம் திகதி வளிமண்டலவியல் அவதான நிலையம் எச்சரித்த்து.

”…… கிழக்குக் கடலில் வீசும் சூறாவளி இப்போது மட்டக்களப்பை நோக்கி வருகிறது. 200 மைல்களுக்கு அப்பால் இப்போது வீசுகிறது. இன்று காலை மட்டக்களப்பு கரையை அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக கடும் புயல் காற்று வீசும். கிழக்குக் கடல் கொந்தளிப்புக் காணப்படும்….”

இந்த இறுதி எச்சரிக்கையையும் கிழக்கு மாகாண மக்கள் சர்வசாதாரணமாக எடுத்துக்கொண்டனர். எனினும் கிழக்கு மாகாண உயர் அதிகாரிகள் சிலர் இந்த எச்சரிக்கையால் விழிப்படைந்தனர். அவர்களால் என்னதான் செய்ய முடியும்?

இயற்கை அன்னை கோபாவேசத்துடன் கிழக்கு மாகாணத்தில் படையெடுத்து விட்டாள். காற்றரக்கனையும் கடல் பிசாசையும் வெள்ளப் பேயையும் தன் படைக்கலங்களாக கொண்டு, பெரும் யுத்தத்திற்கு ஆயத்தமாகி விட்டாள். இயற்கையின் யுத்த களம், இயற்கைக்கு வெறி பிடித்து விட்டால், அவளாகத் தணியும் வரை அவளைத் தணிப்பார் எவரும் இல்லை……

12 மணி நேரம் மட்டக்களப்பு கோட்டை மட்டக்களப்பு வைத்தியசாலை கல்லடிப்பாலம் கல்லடி முருகன்

 

1 review on ““12 மணி நேரம்” ஆவணநூல்”

  1. Abdul Bazith சொல்கின்றார்:

    Hi…

    எனக்கு இப்புத்தகத்தை வாசிக்க வேண்டும் போலிருக்கிறது.. இப்படி புத்தகத்தினை நான் எங்கே பெற முடியும்???

    இப் புத்தகத்தை நான் பெற்றுக் கொள்வதற்கு எப்படியாவது உதவி செய்யுங்கள்….