tamil poet

இ.முருகையன்

(23/04 /1935  -   27 /06/2009) ஈழத்தின் சிறந்த கவிஞர்களுள் ஒருவரும் நாடக ஆசிரியருமான கலாநிதி இ.முருகையன், அவரது பிரிவு ஈழத் தமிழ் அரங்கில் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு. கவிஞர் முருகையன் கவிஞராக மட்டுமன்றி நாடக ஆசிரியராகவும் தமிழறிஞராகவும் திறனாய்வாளராகவும் சீரிய முற்போக்குச் சிந்தனையாளராகவும் அறியப்பட்டவர். அரசகரும மொழித் திணைக்களத்தில் பணியாற்றிய காலத்தில் தமிழ்க் கலைச் சொல்லாக்கத்திற்கு ...

மேலும் வாசிக்க→

மகாகவியின் மறக்க முடியாத குறும்பாக்கள்

ஈழத்து மகாகவி அமரர் உருத்திரமூர்த்தி அவர்களின் குறும்பாக்கள் நான்கினை ஈழநாதன் தனது வலைப்பதிவில் இட்டிருந்தார். மகாகவியின் மறக்கமுடியாத மேலும் நான்கு குறும்பாக்களை இங்கு பதிவிலிடுகின்றேன்: செல்லம்மா சேலை நல்லையர் நெக்குருகி நைந்தார் நம் பெருமான் "வா" என்று வந்தார் நேரே போய்த் தம் மனைவி செல்லம்மா சேலையுள் மறைந்தார். சித்தன் தென்னை மரம் ஏறுகிறான் சித்தன் என்ன கண்டான் அவ்வழகுப் பித்தன் தன்னுடையை மாற்றுகிறாள் கிணற்றடியில் தங்கம்மாள்! இன்னுமிறங்கானாம் அவ்வெத்தன். அத்தி அத்திக்குத் தூது ...

மேலும் வாசிக்க→

அகஸ்தியர்

மனித நேயம் மிக்க ஒருவரை மீண்டும் நாம் நினைக்க வைத்துள்ளது.வர்க்கம் சார்ந்து, சாதிய முறைமைகளை எதிர்த்த படி தனது கற்பனைத் திறத்தால் நம்மையெல்லாம் ஆட்கொண்டவர் தான் அகஸ்தியர்.29/08/1926இல் சவரிமுத்து-அன்னம்மா தம்பதியர்க்கு மகனாக ஆனைக்கோட்டையில் பிறந்தவர். அந்தக் காலத்து எஸ்.எஸ்.சி சாதாரண தரம் வரை கல்வி கற்றிருந்தாலும் அவர் வளர்த்துக்கொண்ட தமிழ் அறிவு அவரை நல்லதொரு படைப்பாளியாக நமக்குத் ...

மேலும் வாசிக்க→

கவிஞர் கமலசுதர்சன்

நூலாசிரியர் கவிஞர் கமலசுதர்சன் ஏற்கனவே நமக்கு நன்கு அறிமுகமானவர் . இவரது முதலாவது கவிதை தொகுதியாகிய மவுனமே வாழ்வாக என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளது . இவர் மானுடத்தை நேசிக்கும் கலைஞர் . தத்துவதேடலில் ஆர்வம் மிக்கவர், இவரது தேடல்கள், ஆசைகள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புக்கள், எல்லாம் கவிதை ரூபம் எடுத்துவருவதை காணலாம். பெரும்பாலான கவிதைகள் இயற்கை அழிவுகள், ...

மேலும் வாசிக்க→

நெடுந்தீவு ஆச்சிக்கு- கவிதைகள்

எனது மூதாதையரின் தீவு அலைகளின்மீது பனைக்கரம் உயர எப்போதும் இருக்கிற என்னுடைய ஆச்சி காலம் காலமாய் உன்னைப் பிடித்த பிசாசுகள் எல்லாம் தோற்றுப் போயின போத்துக்கீசரின் எலும்புகள் மீதும் தென்னம் தோப்பு நானும் என் தோழரும் செவ்விளநீர் திருடிய தென்னந் தோப்பு. தருணங்களை யார் வென்றாலும் அவர்களுடைய புதை குழிகளின்மேல் காலத்தை வெல்லுவாள் எனது ஆச்சி. என்ன இது ஆச்சி மீண்டும் உன் கரைகளில் நாங்கள் என்றோ விரட்டி அடித்த போத்துக்கீசரா ? தோல் நிறம் பற்றியும் கண் நிறம் பற்றியும் ஒன்றும் ...

மேலும் வாசிக்க→

சொற்கள்போல் ஒளியை விழுங்குதல்-கவிதை

இருட்காட்டில் ஒளியைக் கண்டுகொண்டவன் அதைச் சொற்கள் போல் விழுங்கிவிட்டான். சொல்… விழுங்கினால் திக்கும். யாருக்கும் எதுவும் புரியாது. வேடதாரி ஒளியை விழுங்கினான். அது தொண்டைக்குழியில் மீள்முள் போல் சிக்கிக்கொண்டது. பாட்டன் சொன்ன கதைகள் போல் கனவுகண்டான் ஒளி உமிழ்நீரில் கரைந்துவிடும் என்று. ஒளி இரைப்பையில் சமிபாடடையும் என்று. குருடன் அடித்த கதையாய் காத்திருந்தான் ஒளி அசைவற்றுக் கட்டியாகியது. இன்னமும் ஆட்டுக்குட்டியை விழுங்கிய வெங்கடாந்திப் பாம்புடல்போல் துருத்திக் கொண்டிருக்கிறது ஒளி நன்றி - துவாரகன் மேலதிக விபரங்களுக்கு வல்லைவெளி

மேலும் வாசிக்க→

கவிஞர் சேரன்

உருத்திரமூர்த்தி சேரன் யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்தார். ஈழத்தின் குறிப்பிடத்தகுந்த கவிஞர்களில் ஒருவர். ஈழத்தின் நவீன கவிதையின் முதல்வரான மஹாகவியின் மகன். 1972இல் இவரது முதலாவது கவிதை பிரசுரமாகியது. எனினும் 70களின் பிற்பகுதியில்தான் தீவிரமாக எழுதத் தொடங்கினார். கவியரசன் என்ற பெயரிலும் கவிதைகள் எழுதியுள்ளர். சிறுகதைகளும் எழுதிவரும் இவர் இலக்கிய விமர்சன ஈடுபாடும் உள்ளவர். ஓவியத்துறையிலும் ஆர்வமுடையவர். ...

மேலும் வாசிக்க→